தமிழ் நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவின்  காதல் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது.  நயன்தாரா தமிழ் ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக இருந்து வருகிறார் ,  தனது நடிப்பாலும் , அழகாலும் , கடின உழைப்பாலும் ,  தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் நயன்தாரா . எத்தனை நடிகைகள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தனக்கான முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் அவர் .  வயது  ஏற ஏற அவரது அழகும் உடற்கட்டும் ரசிகர்களை கட்டிப் போட வைக்கிறது என்றே சொல்லலாம் .  நயன் என்னதான் நடிகைகளின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது காதல் வாழ்க்கை கசப்பான அனுபவங்களை கொண்டவையாகும் . 

 தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் .  இந்நிலையில் அவர் காதலை மையமாக வைத்து மூன்று  இஸ் ஏ ஐ கம்பெனி என்ற படநிறுவனம் படம் ஒன்று தயாரித்துள்ளது " நானும் சிங்கிள் தான்"  என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் .  தீப்தி திவேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் .  மொட்டை ராஜேந்திரன் ,  மனோபாலா ,  செல்வேந்திரன் , ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .  டேவிட் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நித்திஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார் .  கோபி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இப்படம் பற்றி கூறியுள்ள இயக்குனர் ,  சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேச்சிங்காக உள்ளது.   அதன் அடிப்படையிலேயே நானும் சிங்கிள் தான் என டைட்டிலுடன்  களமிறங்கி இருக்கிறோம். டைட்டிலை போல கண்டன்டிலும்  தனி கவனம் செலுத்தி இருக்கிறோம் .  தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம் ,  அந்த காதலை அடிப்படையாக வைத்து ஒரு கதையை தயார் செய்துள்ளோம். 

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போதுவரை சிலரால் ஆச்சரியமாக பார்க்கும்  ஜோடியாகவும்  உள்ளது .  இந்த படத்தின் ஹீரோயின் இலட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பதுதான் ,  அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டு குத்தி இருப்பதார் அதைப்போலவே  டாட்டு குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார் .  நயன்தாராவுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்டை பறிகொடுக்க காதல் பேய் பிடித்த திரிவது தான் கதை . இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரங்களும் இருக்கும் என்றார் ,  இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் தகவல் தெரிவித்துள்ளார்.