Asianet News TamilAsianet News Tamil

கன்னடத்தில் ரீமேக் ஆகும் நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம்... ஹீரோயின் யார் தெரியுமா?

தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளனர். 

Nayanthara Kolamavu Kokila Movie Remake to Kannada
Author
Chennai, First Published Aug 5, 2020, 8:30 PM IST

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு கேரியர் பிரேக்காக அமைந்த படங்களில் முக்கிய இடம் பிடித்தது கோலமாவு கோகிலா. 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயனை விரட்டி, விரட்டி காதலிக்கும் சூப்பர் பாயாக அந்தர் செய்திருந்தார் யோகிபாபு. 

Nayanthara Kolamavu Kokila Movie Remake to Kannada

தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய உள்ளனர். ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ள மயூரா ராகவேந்திரா என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சீரியல் நடிகை ரக்சிதா ராம் தான் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். 

Nayanthara Kolamavu Kokila Movie Remake to Kannada

தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரச்சிதா ராம் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். வீரம், லில்லி, ஏப்ரல் மற்றும் டாலி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் ரமேஷ் அரவிந்தின் 100 படம் தான். படத்தின் ரீமேக் உரிமையை லைகா நிறுவனத்திடம் பெறும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios