Nayanthara has given the chance to Yogi Babu
நடிகை நயன்தாரா தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். 'கோலமாவு கோகிலா', 'விசுவாசம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக இயக்குனர் கெளதம் மேனன் தயாரிப்பில், 'மா', 'லட்சுமி' ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நயன்தாரா, நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு நயன்தாரா சிபாரிசு செய்துள்ளாராம்.
நயன்தாரா 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து நடித்த போது, இவரின் நடிப்பை பார்த்து வியர்த்து இந்த படத்தில் நடிக்க தானாகவே சிவாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
