நல்லவேளை சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து மட்டும் ஆடி விட்டுப்போனார். இல்லையேல் சிவகாசி நிலைமை என்னவாகி இருக்குமோ..?

அஜித் - நயன்தாரா காம்போ தோற்றதில்லை. விஜய் நயன்தாரா காம்போ ஜெயித்ததில்லை என நெட்டிசன்கள் புள்ளிவிவரப்புலிகளாய் மாறி அதிரடித்து வருகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உச்சபச்ச நாயகர்களான அஜித்துடன் 4 படங்களிலும் விஜய் படங்களில் நயன்தாரா மூன்று படங்களிலும் நடித்து விட்டார். ஆனால், அஜித்துடன் ஜோடி போட்டது 4 படங்கள். விஜயுடன் இரண்டு படங்கள். மூன்றாவதாக சிவகாசி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என அஜித்துடன் நயன்தாரா ஜோடி போட்ட நான்கு படங்களில் ஏகன் மட்டுமே சொதப்பியது. மற்ற மூன்று படங்களும் சூப்பர் ஹிட். 

விஜயுடன் நயன்தாரா ஜோடி போட்ட வில்லு, சமீபத்தில் வெளியான பிகில் ஆகிய படங்கள் சுமார் ரகம் தான். நல்லவேளை சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து மட்டும் ஆடி விட்டுப்போனார். இல்லையேல் சிவகாசி நிலைமை என்னவாகி இருக்குமோ..? இதனை வைத்து அஜித் - நயன்தாரா காம்பினேசன் தோற்றதேயில்லை. விஜய் - நயன்தாரா காம்போ தோற்காமலில்லை என நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.