நயன்தாரா தற்போது கோலிவுட்டின் முன்னனி நாயகி இவருக்கு பின் தான் மற்ற நடிகைகள் என்கிற நிலை உள்ளது.
அதற்கு ஏற்றாப்போல் நயன்தாரா எது செய்தாலும் அதை ரசிக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் ரசிகர்களை பொறாமை பட வைத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், காரணம் நயன்தாராவும் இவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்திகள்தான்.
ஆனால் இதுவரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதல் பற்றி எங்கும் வாய் திறக்கவே இல்லை.
இந்நிலையில் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனின் அம்மாவை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தாராம்.
முதலில் விக்னேஷ் சிவனின் அம்மா போலீஸ் என்ற பதட்டத்தோடு பழகிய நயன்தாரா பிறகு அவரிடம் சகஜமாக பேசி வருகிறாராம். ஒரு வேலை ஐஸ் வைக்கத்தான் இந்த ட்ரீட்டா என பலரையும் யோசிக்க வைத்துள்ளது நயனின் செயல்.
