தமிழ் திரையுலகில் பல நடிகைகள் முன்னணி நடிகை இடத்தை நோக்கி வந்தாலும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்தவர் நடிகை நயன்தாரா.

இவரை திரைப்படங்களில் கமிட் செய்ய, பல முன்னணி இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என போட்டி போட்டுக் கொள்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என ரசிகர்கள் நம்புகின்றனர். எனவே இதனையே சாக்காக வைத்து சம்பளத்தையும் கோடிகோடியாக ஏற்றி வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் சூப்பர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தை தொடர்ந்து,   மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து,  போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன.  படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி படக்குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா 'Fossil ' நிறுவனத்தின் காஸ்லி வாட்சை பரிசாக கொடுத்துள்ளார். 

அதேபோல் இந்த படத்தில் பணியாற்றி துணை இயக்குநர்களுக்கு காஸ்ட்லியான ஜீன்ஸ் மற்றும்மற்றும் டி-ஷர்ட்டை பரிசாக வழங்கியுள்ளார்.  இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர். மேலும் நயன்தாராவின் கடைசி நாள் படப்பிடிப்பை சிறப்பிக்கும் விதமாக கேக் வெட்டி நயன்தாராவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.