Nayanthara get 5 crores for Advertisement

நடிகை நயன்தாரா தான் நடித்து வரும் திரைப்படங்களுக்கு தான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்றால், தற்போது விளம்பரப்படங்களுக்கும், படங்களை மிஞ்சும் அளவிற்கு அதிக தொகை கேட்கிறாராம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே இவர் விக்ரமுடன் நடித்து வெளிவந்த இருமுகன் படத்திற்கு 3 கோடிரூபாய் சம்பளம் வாங்கியது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில். சமீபத்தில் இவர் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்காக ஒரு விளம்பர படம் நடித்து கொடுத்தார். 

இதில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் மூன்று விளம்பரப்படங்கள் இந்த நிறுவனத்திற்காக நடித்துக்கொடுத்தார் இந்த மூன்று விளம்பரப்படங்கள் அனைத்தையும் சேர்ந்தால் கூட ஐந்து நிமிடத்திற்கு குறைவாக தான் வரும்.

ஆனால் இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்காக இவர் தற்போது தெலுங்கில் நடித்து வரும் மெகா பட்ஜெட் படத்தை தள்ளி வைத்து விட்டு வந்து நடித்துக்கொடுத்தாராம். 

இந்த விளம்பரப்படத்தில் இவர் நடித்துள்ளதால் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பரப்படத்தில் நடிக்க நயந்தாராவை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நயந்தாரா தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருவதால் வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.