தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தங்களது உள்ளம் கவர்ந்த நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா. தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 

சினிமா நிகழ்ச்சிகள், கோவில், பார்ட்டி என எங்கு சென்றாலுக் விக்கியுடன் சுற்றி வரும் நயன், தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பிற்கு கூட காதலருடன் சென்றது பரபரப்பை கிளப்பியது. அடிக்கடி வெளிநாடுகளில் ஊர் சுற்றிய இருவரும் தங்களது ரொமாண்டிக் போட்டோக்களை வெளியிட்டு முரட்டு சிங்கிள்ஸை காண்டாக்கி வந்தனர். 

நயன் - விக்கி காதல் ஓவர் டீப்பாகிவிட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவரும் தனித் தனியே போட்டோ போட்டது ரசிகர்களுக்கிடையே சந்தேகத்தை கிளப்பியது. அதே போல நியூர் பார்ட்டியில் விக்கி குடித்துவிட்டு வந்ததாகவும், அதனால் நயன் அவர் மீது செம்ம கடுப்பில் இருப்பதாகவும் வதந்தி பரவியது. 

இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் முடிந்துவிட்டது. இருவரும் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்று தகவல்கள் பரவின. அதற்கு ஏற்ற மாதிரி பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கும் நயன் தனியாகவே வந்திருந்தார். 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் எவ்வித சிக்கலும் இன்றி தொடர்வதாகவும், புத்தாண்டின் போது நயன்தாராவின் அந்த அசத்தல் போட்டோக்களை எடுத்தது விக்கி தான் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு இருவரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.