Asianet News TamilAsianet News Tamil

Gentleman 2 : ஜென்டில்மேன் 2 படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் நயன்தாரா... சாரி... ஜூனியர் நயன்தாரா

Gentleman 2 : ஜென்டில்மேன் 2-வில்ஹீரோயினாக நடிக்க நயன்தாரவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சமுக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nayanthara Chakravarthy committed as heroine for Gentleman 2
Author
Tamil Nadu, First Published Mar 23, 2022, 10:31 AM IST

ஜென்டில்மேன் திரைப்படம்

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தின் மூலம் தான் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற காமெடி, ஆக்‌ஷன், இசை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்ததால் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

2-ம் பாகம் தயாராகிறது

இதையடுத்து தற்போது சுமார் 30 ஆண்டுகள் கழித்து ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்துள்ளார் கே.டி.குஞ்சுமோன். ஆனால் முதல் பாகத்தில் இடம்பெற்ற அர்ஜுன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இப்படத்தில் இடம்பெறப்போவதில்லை என்பதையும் ஆரம்பத்திலேயே கூறிய அவர் புதுக் கூட்டணியில் இப்படம் தயாராக உள்ளதாக அறிவித்தார்.

Nayanthara Chakravarthy committed as heroine for Gentleman 2

பாகுபலி இசையமைப்பாளர் ஒப்பந்தம்

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்க உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இசையமைப்பாளர் மரகதமணி, பாகுபலி, ராஜமவுலியில் ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.

Nayanthara Chakravarthy committed as heroine for Gentleman 2

ஹீரோயின் யார்?

இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க நயன்தாரவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சமுக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவரை திரையுலகில் ஜூனியர் நயன்தாரா என்று அழைப்பர். மலையாள நடிகையான இவர் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

இதையும் படியுங்கள்... Lokesh kanagaraj :லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த அமிதாப் பச்சன்! ஷூட்டிங்கும் முடிஞ்சதாம் - அட... இது எப்ப?

Follow Us:
Download App:
  • android
  • ios