Asianet News TamilAsianet News Tamil

தனது நூறாவது படத்தில் யாரோடு டூயட் பாடிக்கொண்டிருப்பார் நயன்தாரா?...

அடுத்து இரண்டு படங்கள் நடித்த அவர் 2005ல் ஹரி இயக்கத்தில் சரத் ஜோடியாக ‘ஐயா’படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு வலது கால் எடுத்து வைத்தார். ஐயாவில் அம்மாவுக்கு சுமார் பேர்தான் என்றாலும் அதே ஆண்டில் வெளியான ‘சந்திரமுகி’அவரைக் கமர்சியலாகக் காப்பாற்றியது.ஆனால் அதே ஆண்டில் வெளியான ‘கஜினி’படத்தில் படு டம்மி கேரக்டரில் நடிக்கவைத்தார் இப்போதைய ‘தர்பார்’பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

nayanthara at her 65th film
Author
Chennai, First Published Sep 16, 2019, 7:05 PM IST


சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நேற்று பூஜை போடப்பட்ட ‘நெற்றிக்கண்’நயன்தாராவின் 65 வது படம் என்ற தகவலையும் அவரே வெளியிட்டதால் லேடி சூப்பர் ஸ்டார் கடந்து வந்த கரடு முரடான பாதைகளுக்கு சில நெட்டிசன்கள் பின்னோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதுபோல் எதற்காகவோ வெட்கப்பட்டுக்கொண்டு விக்னேஷ் சிவனின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் நயனின் நயனமான புகைப்படம் ஒன்றும் வைரலாகிவருகிறது.nayanthara at her 65th film

2003ம் ஆண்டு வெளியான சத்யன் அந்திக்காடுவின் ‘மனசினக்கரே’தான் நயனின் முதல் படம். இப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்தார்.இதற்கடுத்து ஃபாசில் இயக்கத்திலும் ஷாஜி கைலாஷ் இயக்கத்திலும் அடுத்து இரண்டு படங்கள் நடித்த அவர் 2005ல் ஹரி இயக்கத்தில் சரத் ஜோடியாக ‘ஐயா’படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு வலது கால் எடுத்து வைத்தார். ஐயாவில் அம்மாவுக்கு சுமார் பேர்தான் என்றாலும் அதே ஆண்டில் வெளியான ‘சந்திரமுகி’அவரைக் கமர்சியலாகக் காப்பாற்றியது.ஆனால் அதே ஆண்டில் வெளியான ‘கஜினி’படத்தில் படு டம்மி கேரக்டரில் நடிக்கவைத்தார் இப்போதைய ‘தர்பார்’பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அடுத்த ஆண்டில் ‘வல்லவன்’படம் மூலம் சிம்புவால் மீடியாவில் மிக முக்கியத்துவம் பெற்ற நடிகையாகிறார். அடுத்து ‘ஈ’படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தர ஷங்கர்,ரஜினியின் ‘சிவாஜி’படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு இறங்கி ஆடி மோசம் போகிறார்.அடுத்து அஜீத்தின் ‘பில்லா’படம் அவரை தூக்குகிறது.கூடவே வந்த ‘யாரடி நீ மோகினி’தமிழ் சினிமாவின் ஒரே மோகினி நயன் தான் என்று உரத்து அறிவிக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்த ‘சத்யம்’,’ஏகன்’,’வில்லு’,என்று செம ஃப்ளாப் படங்கள். 2010 ல் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’,2011ல் ஸ்ரீ ராம ராஜ்யம்’ 2013ல் ’ராஜா ராணி’ என்று ‘விஸ்வாசம்’வரை வருஷக்கு ரெண்டு ஹிட் ரெண்டு ஃப்ளாப்புமாக தொடர்ந்து வரும் நயன் ஒரு வழியாக ‘நெற்றிக்கண்’ மூலம் 65 வது படத்தை எட்டியிருக்கிறார்.nayanthara at her 65th film

கடந்த 17 ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் படங்களில் நடிக்கும் அதே சமயத்தில் புதுமுகநாயகர்களுடன், தேவைப்பட்டால் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவும் கூட நயன் தயங்கியதில்லை என்பது அவரது ப்ளஸ் பாய்ண்ட். இன்னும் ஏழெட்டு ஆண்டுகளில்  தனது 100வது படத்தில் அஜீத்,விஜயின் வாரிசுகளுடன் இவர் டூயட் பாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தாலும் ஆச்சர்யப்படத்தேவையில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios