கீர்த்தியை மிரட்டினாரா நயன்தாரா? காரணம் என்ன தெரியுமா?
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. நடிகை நயன்தாராவின் காதலனும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா, கீர்த்தி, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கீர்த்தி சுரேஷை பேச அழைத்தபோது மேடைக்கு வந்த அவர்,’சூர்யாவுடன் நடிக்கும் ஆசை இப்படத்தில் நிறைவேறியது. பிரதர் விக்னேஷ் சிவன் படத்தை கலகலப்பாக இயக்கி உள்ளார். பிரதர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் அனைவரையும் நல்லமுறையில் நடத்தினார்’ என விக்னேஷ் சிவனை பிரதர், பிரதர் என அழுத்தம் கொடுத்து பேசினார். அவரது பேச்சில் ஒரு நடுக்கம் தெரிந்தது.
பிறகு பேச வந்த விக்னேஷ் சிவன்,’இங்கு பேசிய கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் பிரதர் என்று அழுத்தம் கொடுத்து பேசினார். அவர் எதற்கு அப்படி கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. எதற்காக பயப்படுகிறார் என்றும் தெரியவில்லை.
கீர்த்தி, நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் எனக்கு சிஸ்டர்தான். நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள் சிஸ்டர்’ என பேசினார் விக்னேஷ் சிவன். விக்னேஷின் இந்த பேச்சை கேட்டு அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது.
கீர்த்தி விக்னேஷை அண்ணா அண்ணா என அழைத்ததற்கு பின்னர் மிக பெரிய ரகசியம் ஒளிந்து இருக்கிறதாம், தானாஸ் எற்ந்த கூட்டம் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொஞ்சம் கீர்த்தியிடம் வழிந்தாராம். இதை தெரிந்த நயன்தாரா ஏற்கனவே இரண்டு காதல் தோல்வி மீண்டும் ஒரு ஓர் தோல்வியா? என கீர்த்தி சுரேஷ்யை மிரட்டியதாகவும் இதனால் தான் கீர்த்தி சுரேஷ் இப்படி மேடை பேசினார் என்றும் கூறப்படுகிறது.