தலைப்பில் உள்ள பெயர்க் குழப்பம் நேற்று விக்னேஷும் நயனும் போட்ட ட்விட்டர் பதிவுகளால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலால் உண்டானது. ஆமாங்க ரெண்டுபேரும் தங்களோட டிக்கட்டுகளை ட்விட்டர் பக்கத்துல போட்டுட்டு உலகம் சுத்தக் கிளம்பிட்டாங்க.

நயன் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள ‘கொலையுதிர்காலம்’ இன்னும் 4 தினங்களில் ரிலிஸாக உள்ளது. அவர் மலையாளத்தில் நடித்து வந்த ஒரே படமான ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு கடந்த 4 நாட்களுக்கு முன்தான் இறுதிக்கட்டத்துக்கு வந்தது. இன்னொரு பக்கம் ரஜினியின் ‘தர்பார்’படத்துக்கு விடப்பட்ட சின்ன பிரேக் சற்று பெரிய பிரேக்காக மாறியுள்ளது. விஜயின் ‘தளபதி 63’லோ நயன்தாரா இல்லாத கால்பந்தாட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இப்படிப்பட்ட கேப்பை சும்மா விடுவார்களா உள்ளம் கவர் கள்வர்கள் நயனும் சிவனும்? அந்த வகையில் தற்போது இருவரும் சேர்ந்து விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக எகிப்தில் இருக்கும் ஏதென்ஸில் இருந்து santoria சென்றுள்ளனர். அதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வழக்கம்போல் ஃபாலோயர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கட்டிக்கொண்டுள்ளனர்.