இளையதளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார், இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்ல படுகிறது.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் , இப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முன்பு கசிந்தது.
ஆனால் தற்போது அட்லீ மீண்டும் நயன்தாராவை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம், அதை பற்றியான பேச்சுக்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறதாம்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி சேரும் வாய்ப்பு நயன்தாராவிற்கா அல்லது காஜலுக்கா என்று பொறுத்து தன பார்க்க வேண்டும்.
