ராக்கி (Rocky) படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 வருடமாக காதலித்து வருகின்றனர். காதலைப் போல் சினிமாவிலும் ஜொலித்து வரும் இவர், கடந்தாண்டு ரவுடி பிக்சர்ஸ் என்கிற பட நிறுவனம் ஒன்றை தொடங்கினர். அந்நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சில படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையையும் அவர்கள் கடந்தாண்டு கைப்பற்றினர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை கடந்த ஓராண்டாக வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது ராக்கி படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில். இந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக ‘காலம் ஒரு துரோகி’ என்கிற பாடலை படக்குழு நாளை வெளியிட உள்ளது. இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்துள்ளாராம். புஷ்பா படத்தை புரமோட் செய்ய சமந்தாவை ஒரு பாடலில் ஆட வைத்திருந்தனர். அதேபோல் தற்போது ராக்கி படத்தை புரமோட் செய்ய நடிகை நயன்தாரா, ஒரு பாடலில் மட்டும் நடித்துள்ளார்.