நடிகை ஓவியா நடிப்பில், இயக்குனர் அனிதா உதூப் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் '90ml'. இந்த படம் வெளியாகி ஒரு சிலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பலர் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக இந்த படம் இருப்பதாக வசைபாடி வருகிறார்கள்.

மேலும் நடிகை ஓவியாவும், தன்னுடைய படத்தை பிடிக்காதவர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த படத்தில் ஓவியா மோசமாக நடித்திருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில், திரண்ட 'ஓவியா ஆர்மி' என்கிற அமைப்பை விட்டு ரசிகர்கள் பலர் விலகி விட்டதாக தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ‘90ML’ பிரச்சனை கமிஷ்னர் அலுவலகம் வரை சென்றுள்ளது." பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஓவியா நடித்திருப்பதாகவும் அதற்கு அவரை கைது செய்ய வேண்டும் என்றும்,  இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விரைவில் இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என தெரிகிறது. மேலும் ஓவியா கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.