பொதுவாக,  நடிகர்களின் வாரிசுகள் பலரும் திரைத்துறை சம்பந்தமான படிப்பு, ஆடல், பாடல், போன்றவற்றை  தேர்வு செய்து, அதில் சாதனை படைக்க விரும்புவார்கள். சிலர் தங்களுடைய படிப்பில் முழு கவனத்தை செலுத்த விரும்புவார்கள் அது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் பிரபல நடிகர் மாதவனின் மகன் சற்று வித்தியாசமாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் தற்போது தேசிய அளவில் டெல்லியில் நடைபெற்ற 100  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசு வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதனை மாதவன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  மகனை வாழ்த்தியுள்ளார். மேலும் மாதவனின் மகன் வேகந்துக்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

ஏற்கனவே வேகந் கடந்த ஆண்டு, தேசிய அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற நீச்சம் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் காதல் ஹீரோவாக இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுத்த மாதவன், இதே போன்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது விண்வெளி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு வரும் படத்தில்  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.