natchiyar release date announced

தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் பாலா இயக்கி வந்த திரைப்படம் 'நாச்சியார்'. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் ஜி.வி.பிரகாஷ் திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீஸர் வெளியான போது நடிகை ஜோதிகா பேசிய ' தே' வார்த்தைக்காக மாதர் சங்கம் முதல், பலரும் போர்க்கொடி தூக்கினர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குனர் பாலாவே தன்னுடைய சொந்த நிறுவனமான 'பி' ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.