நாச்சியார்:

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்து நடித்துள்ள திரைப்படம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக அறிமுக நடிகை இவானா நடித்துள்ளார்.

கதை:

18 வயது நிரம்பாத காதலன் காதலியின் உண்மையான காதலையும்.... இதனால் ஏற்படும் சிக்கல்களையும் கூறி நேர்த்தியாக 100 நிமிடத்தில் இந்த படத்தை விறுவிறுப்பாக காட்சியமைதிருக்கிறார் பாலா. 

இவானா:

முதல் படத்திலேயே, பாலாவின் பட்டறையில் பயிற்சி எடுத்துள்ளார் நடிகை இவானா. ஜி.வி.பிரகாஷ் 18 வயது நிரம்பாத இளைஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருடைய உண்மை வயது பலருக்கும் தெரியும்.

ஆனால் இந்த படத்தில் மைனர் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இவானாவிற்கு உண்மையில் 17 வயது தான், இவர் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றாராம்.

திரைப்படம் நடிப்பதில் சிறு வயதில் இருந்து பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், இவருக்கு முதல் படமே தமிழ் சினிமாவின் முன்னணி இயகுனர்களில் ஒருவரான, பாலாவின் திரைப்படம் கிடைத்தாதால் தான் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

இவானா திரைப்படத்தில் நடித்தால் இவருக்கு ஸ்பெஷல் கிளாஸ்லாம் வைத்து 12ஆம் வகுப்பு பாடங்கள் எடுக்கப்பட்டதாகவும் தன்னுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தனக்கு மிகவும் உதவியதாக கொஞ்சும் தமிழில் கூறியுள்ளார் இவானா.