நடிகர் சித்தார்த் அறிமுகமான முதல் படம் பாய்ஸ். இந்த  படத்திலேயே நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

எப்போதும் ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிக்க விரும்பாத சித்தார்த், ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படத்தில் நடித்து அசத்தி வருகிறார். 

அந்த வகையில் ஜிகிர்தண்டா, ஆயிரத்தில் ஒருவன், காவியத்தலைவன், ஜில் ஜங் ஜக், அவள் என சொல்லிக்கொண்டே  போகலாம்.. இந்நிலையில் சித்தார்த், தற்போது சைத்தான் கா  பச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இதைத்தொடர்ந்து தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழில், யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார், அடுத்தபடியாக நானி நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க சித்தார்த் ஒப்பந்தமாகியிருக்கிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தின் வில்லன் வேடத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறாராம் சித்தார்த்.

மேலும் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நானி மற்றும் சித்தார்த் தாறுமாறாக அடித்து கொள்ளும் காட்சிகள் அதிகம் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.