நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை உச்சகமடைய செய்துள்ளது. 

நடிகர் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பின் தன்னுடைய சகோதரர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை உச்சகமடைய செய்துள்ளது.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கூட்டணி என்றாலே பலருக்கும் எதிர்பார்ப்புகள் எகிறிவிடும், இவர்களுடன் யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார் என்றால் திரையில் பட்டையைக் கிளப்பும் ட்ரீட் கன்பார்ம் என்பது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், என்.ஜி.கே வரை செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொட்டதெல்லாம் ஹிட்டு தான். தற்போது அந்த கூட்டணி 8வது முறையாக ஒன்றிணைந்துள்ளது. 

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் செல்வராகவன் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். அதில், 8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா இந்த மூவர் கூட்டணிக்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இவர்கள் படைப்பில் வெளியான அத்தனை பாடல்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. செல்வராகவன் படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை தனி வலிமை சேர்ப்பது வழக்கம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து பல படங்களை வைத்துள்ள தனுஷ், தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக சற்று முன் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் பிற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Scroll to load tweet…