பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  தற்போது இது குறித்து  வலைதள ஊடகத்தில் மூலம் நந்தினி தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் அவர் தான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். கார்த்தி இப்படி ஒரு நிலைக்கு ஆனதை என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை. நான் கார்த்தியின் அம்மாவை என் அம்மா போல தான் நினைத்தேன். என் குடும்பமாகவே தான் பார்த்து வந்தேன்.

நாங்கள் ஒரு சில கருத்துவேறுபாடுகளுடன் இருந்த போது, எங்களை சேர்த்து வைக்க வேண்டிய அவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்கள் எங்களை சமாதானம் செய்ய வர வில்லை.

சமீபத்தில்  நான் கார்த்திக்கை பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் அவரது குடும்பத்தார் என்னை பார்க்க விடவில்லை. கடைசி நேரத்தில் சுடுகாட்டில் கூட என் நண்பர்கள், அவர்களிடம் நந்தினியை கார்த்திக்கை பார்க்க விடுங்கள் என கேட்டனர்.

அவர்கள் என்னையும், நண்பர்களையும் அசிங்கமாக திட்டி அனுப்பிவிட்டனர். நான் கார்த்தியை இழந்துவிட்டேன் என கண்ணீர் மல்க பேசினார்.

வெண்ணிலா என்பவருக்கு ஏற்கனவே ஜான் என்பவருடன் திருமணமாகியுள்ளது. வெண்ணிலாவுக்கும் கார்த்திக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவரின் தற்கொலைக்கு காரணம் இவர் தான் என சொல்லப்படுகிறது.

கார்த்திக் மிகுந்த மன உளைச்சலில் இருந்த போது நான் தான் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தேன். அவரை அதிலிருந்து மீட்டெடுத்தேன்.

சேலம் அபிநயாவையும் காதலித்துள்ளார் என்பதும் இப்போது தான் தெரிந்தது. கார்த்தி குடும்பத்திற்கு எவ்வளவு சோகமோ, அதை விட பல மடங்கு சோகம் எனக்கு உள்ளது. வலி இருக்கிறது. எப்படி இருக்கப்போகிறேன் என தெரியவில்லை.

என் அப்பா, அம்மா இருவரும் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள். சாதாரண குடும்பத்திலிருந்து தான் நான் வந்துள்ளேன். என் அப்பா, அம்மாவை விட்டுகொடுக்கமாட்டேன்.

அவர்களை நான் பார்த்துக்கொள்வேன். எனக்கு வந்தது போல வேறு யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது என கதறியபடி கூறியுள்ளார்.