nanban movie actor risen simon maas getup

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்து 'நண்பன்' படத்தில் மில்லி மீட்டர் என்கிற சிறு காதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரின்சன் சைமன். 

டான்ஸ் ஷோ:

சிறு வயதில் இருந்தே, நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, நிறைய டான்ஸ் ஷோக்களில் ஆர்வம் காட்ட துவங்கினார். இதற்கு முதல் படியாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ல்ஸ் உள்ளிட்ட நிகழ்சிகளில் அமைந்தது. திரையுலகில் உள்ளவர்களின் கவனத்தை தன்னுடைய நடன திறமை மூலம் திரும்பிப்பார்க்கவும் வைத்தார்.

திரைப்படங்கள்:

இதுவரை, சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெட்டை சுழி, நண்பன், பா.பாண்டி போன்ற பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படி இவர் பலபடங்களில் நடித்திருந்தாலும், இவரை வெளியே தெரியவைத்து என்றால் அது நண்பன் படத்தில் இவர் மில்லி மீட்டராக நடித்த கதாப்பாத்திரம் தான். 

தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்டைல்லை பின்பற்றும் வகையில் குறும்படங்களில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ரின்சன். மேலும் விரைவில், இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பன் படத்தில் மீசை தாடி இல்லாமல், மிகவும் ஒல்லியாக காணப்பட்ட இவரா... இந்த பையன் என ரசிகர்களையே ஆச்சர்ய படுத்தும் அளவிற்கு... தாடி, மீசை என மிகவும் மாஸ் கெட்டப்பில் தோற்றமளிக்கிறார் ரின்சன்.