namitha engagement function

கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நமிதா, இவர் மச்சான்ஸ் என அழைக்கும் ஒரு வார்த்தைக்காகவே தற்போது வரை அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உடல் எடை காரணமாக சினிமா வாய்ப்புகள் குறித்தாலும், சின்னத்திரையில் நடன நிகழ்சிகளில் நடுவராக இருந்துவந்தார். மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சில விமர்சனங்களை பெற்றாலும் தற்போது வரை இவர் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டுதான் வருகிறார்.

37 வயதாகும் நமிதா, பல நாட்களாக திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீர் என அவருடைய திருமண அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இவருடன் ஒரே ஒரு படத்தில் நடித்த வீரா என்பவரை காதலித்ததாகவும், தற்போது அவரை பெற்றோர் விருப்பப் படி திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று நமிதாவின் மெஹந்தி நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில்... இன்று காலை இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

நாளை காலை இவர்களுடைய திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தற்போது திருப்பதியில் திருமண நிகழ்ச்சி நடத்தப்படுவதால். சென்னையில் நமிதாவின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.