பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று மக்களால் மிகவும் குறைவாக ஆதரிக்கப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டவர் நடிகை நமிதா. 

இந்த தகவலை, கமலஹாசன் வெளிப்படுத்தியதும் வெளியே வந்த நமிதாவிடம் 100 நாட்கள் முடிந்த பின்பு யாருடன் நீங்கள் நட்பு பாராட்டுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த, நமிதா... காயத்திரி, ரைசா, ஆரவ், சக்தி, வையாபுரி, கணேஷ் என அனைவர் பெயரையும் சொன்னவர் ஜூலி மற்றும் ஓவியா பெயரை மற்றும் கூறவில்லை.

இதன்மூலம் வெளியே யார் வந்தாலும் பேசுவேன் ஆனால் ஓவியா மற்றும் ஜூலியுடன் மட்டும் கண்டிப்பாக பேசமாட்டேன் என கூறியுள்ளார்.