Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரபல நடிகை !!

பிரபல நடிகை நமீதா பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.vvvvvvvvvvvvvvvvvvv

nameetha join BJP
Author
Chennai, First Published Nov 30, 2019, 9:51 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நமிதா. இவர் பீக்காக இருக்கும்போதே திருச்சியில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு குறைந்து போனது, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று  புகழ் பெற்றார். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்தது கொண்டார்.

nameetha join BJP

இந்நிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இருந்து விலசி இன்று பாஜகவில் இணைந்தார்.
பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து  பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்

Follow Us:
Download App:
  • android
  • ios