தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றநடிகை நக்மா பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை அவமானப்படுத்தியதாக எதிர்ப்பு தெரிவித்து கொதித்ததால் தங்கை ஜோதிகாவை அடுத்து பலத்த சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார்.

 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருப்பவர் நடிகை நக்மா. இவர் ஆஜ்தக் நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் தாரிக் பற்றி விவாதத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா ஓம் காஷ்யப் பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை நக்மா, தாரிக்கை பற்றி தவறாக பேசுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் என நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு எதிராக கொதித்து கத்றி விட்டார் நக்மா. 

அடுத்து இந்த சம்பவம் குறித்து நக்மா தனது டவிட்டர் பக்கத்தில், ’’பாகிஸ்தான் பத்திரிக்கையாளரானதாரிக் பியர்சாடா  பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனா ஓம் காஷ்யப் , பாஜக செய்தித் தொடர்பாளர் போல பேசினார். அந்த வார்த்தைகளை என்னால் தாங்க முடியவில்லை. ஒரு பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவதால், அவர்களை அவமதிப்பதில் நீங்கள் மோசமாக நடந்து கொள்கிறீர்கள்”எனபதிவிட்டு இருந்தார்.

நக்மாவின் இந்தச் செயலை கண்டித்து  #NagmaStandsWithPakistan என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.