nakma talk about agricultures

தொடர்ந்து 40 நாட்களாக நல்ல சாப்பாடு, துணி மணிகள், குடிக்க தண்ணீர் என அடிப்படை வசதிகள் என அனைத்தையும் புறக்கணித்து விட்டு, விவசாயம் காக்க, பல லட்சம் விவசாயிகள் சார்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை.

தங்களது அவல நிலைமையை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி உலகிற்கு வெளிச்சம் போட்டுகாண்பித்தனர், ஆனால் இவர்களுடைய அவல குரலுக்கு மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை. 

இந்நிலையில் மதுரை வந்த நடிகை நக்மா செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வரை நான் விடமாட்டேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.