nagini serial artist drink for shooting
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப பட்ட டப்பிங் சீரியல் மூலம் அணைத்து தரப்பு ரசிகர்களுடையே வரவேற்பை பெற்றவர் நாகினி புகழ் மௌனிராய்.
இதில் நாகினியாக நடிக்கும் மவுனி ராய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இதனால் இவரை நாயகியாக வைத்து படம் எடுக்கவும் ஒரு சில ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் நன்றாக குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக ஒரு செய்தி காட்டு தீ போல் பரவியது. இவரின் செயலால் படக்குழு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வந்த தகவல்படி, மவுனி ராய் சீரியலில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக குடித்தது போல் நடித்திருக்கிறார். இந்த ஷாட் முடிந்த பிறகு படப்பிடுப்பி முடிக்க பட்டு பேக்அப் ஆகியிருக்கிறது.
சீரியலுக்காக எடுக்கப்பட்ட காட்சியை யாரோ தவறாக நிஜத்தில் அவர் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருப்பதாக வதந்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர்.
