nagarjuna studio fire

நடிகரும், நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவிற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் நேற்று மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சிறு இடத்தில் ஆரம்பித்த தீ மளமளவென அந்த நிறுவனத்தில் முழுவதும் பரவத் தொடங்கியது, இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் இந்த தீயை அணைத்தனர்.

இதனால் அந்த ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த, இரண்டு திரைப்படங்களின் செட்டுகள் முழுவதும் எரிந்து நாசமாகின என்றும் இதன் மதிப்பு இரண்டு கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நாகார்ஜூனாவின் தந்தை நாகேஸ்வர ராவ் தொடங்கிய இந்த அன்னபூர்ணா ஸ்டுடியோவில், தொடர்ந்து படப் பிடிப்பு, டிவி தொடர்கள் , ரியாலிட்டி ஷோ போன்று எதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.