சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து நாகர்ஜுனா மனம் திறந்ததாக பரவி வரும் பேட்டி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்...

சுமார் 7 வருடத்திற்கு மேல் உருகி... உருகி... காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் சில வருடங்களில் பிரிவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்தாண்டு ஒரே நேரத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்கிற எமோஷ்னல் பதிவுடன் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விவாகரத்துக்கு பின் எழுந்த சில வதந்திகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் தங்களுடைய செகண்ட் இன்னிங்க்ஸை வேற லெவலுக்கு துவங்கியுள்ளனர். விவாகரத்துக்கு பின் இவர்கள் இருவரது சினிமா கெரியரும் சக்சஸ்புல்லாக உள்ளது.

இதுநாள் வரை கோலிவுட் - டோலிவுட்டில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு சர்ச்சையான கதாபாத்திரத்தை கூட துணிச்சலோடு தேர்வு செய்து நடிக்க தயாராகி விட்டார். அதேபோல் நாக சைதன்யாவும், தனது மார்க்கெட்டை விரிவாக்கி பாலிவுட் வரை சென்றுவிட்டார். அங்கு அமீர்கானுடன் லால் சிங் சட்டா என்கிற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பங்கார்ராஜு என்கிற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

இது ஒருபுறம் இருக்க இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது. அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளும், ஒரு வேளை அப்படி இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. சமீபத்தில் பங்கார்ராஜு பட புரமோஷன் போது சமந்தா குறித்த கேள்விக்கு பதிலளித்த நாக சைதன்யா, தனக்கு சிறந்த ஜோடி சமந்தா தான் என கூறினார்.

அதேபோல் நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட விவாகரத்து அறிவிப்பு தொடர்பான அறிக்கையை திடீரென டெலிட் செய்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் 

 தனியார் பொழுதுபோக்கு இணையதளத்திற்கு நாகசைதன்யா வழங்கிய நேர்காணல் ஒன்று வைரலாகியது..அதில், சமந்தா முதலில் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக நாகார்ஜுனாவை மேற்கோள் காட்டினார், "நாக சைதன்யா தனது முடிவை ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டார், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயருக்கு என்ன நடக்கும் என்று அவர்கல் கவலைப்படவில்லை என கூறியிருந்தார்..

இதுகுறித்து தற்போது அந்த கட்டுரை போலியானது என நாகார்ஜுனா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் "சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.