பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, நடிகை அமலா நட்சத்திர ஜோடிகளின் மகன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் இறுதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் இருவீட்டாரும், அணைத்து சொந்த பந்தங்களுக்கும் பத்திரிகை முதல் கொண்டு வைத்து முடித்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய திருமணம் நிறுத்த பட்டதாக தீடிர் செய்திகள் வெளிவந்தது.
இந்த திருமணம் நின்றதால் நாகர்ஜூனாவின் முதல் மனைவியின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த நடிகை சமந்தாவும் மிகவும் அதிர்ச்சியடைத்ததாக கூறப்பட்டது.
மேலும், தற்போது இவர்கள் திருமணம் நின்றதற்கு முக்கிய காரணம் இதுதானாம்.... அகிலுக்கும் அவருடைய காதலிக்கும் சமீபத்தில் ஏற்பட்ட ஈகோ மோதல் நாளடைவில் பெரும் சண்டையாக மாற, இனிமேல் சேர்ந்து வாழ்வது இருவருக்கும் ஒத்து வராது என வீட்டில் பேசி திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.
