Nagarjuna - Ramkopal Varma Combo ...
நடிகர் நாகார்ஜுனாவும், இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் நாகார்ஜுனா.
இதனை ராம்கோபால் வர்மா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், “27 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
மேலும், அந்தப் படத்தை எதார்த்தமான சண்டை காட்சிகள் நிறைந்த படமாகவே தயாரிக்க உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ‘சிவா’ தெலுங்கு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நாகர்ஜுனா தற்போது சமந்தா - நாக சைதன்யா திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறார். இவர்களது திருமணம் முடிந்தபின் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் 27 வருடங்களுக்கு பின்னர் ராம்கோபால் வர்மா மற்றும் நாகார்ஜுனா இணைந்து பணியாற்ற உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
