நடிகர் சசிகுமார் நடிப்பில்,  மீண்டும் சமுத்திரக்கனி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம்  'நாடோடிகள் 2'. திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார், அனன்யா, பரணி, விஜய் வசந்த், அபிநயா ஆகியோர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நாடோடிகள்'. காதலுக்காக உயிரையே பணயம் வைக்கும் நண்பர்கள் மற்றும் அவர்கள் மனதில் உள்ள அழகிய காதல், அதன் தோல்வியால் வரும் வலி என உணர்வு பூர்வமான கதையை இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் சமுத்திரக்கனி.

தற்போது 11 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2 ' எடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதுல்யா ரவி, பிக்பாஸ் புகழ் பரணி, நமோ நாராயணா, ஞானம்பந்தம், சூப்பர் சுப்பராயன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார பூர்வா அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.