நடிகர் சங்கத்தில்​ ​இன்று,  மறைந்த​ ​நடிகை 'பத்மஸ்ரீ' ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. 

இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருக்கும் பலருடன் பணியாற்றியுள்ளார். மேலும் 80 களில் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா, ராதா, உள்ளிட்ட பலருக்கு டப் போட்டியாளர் இவர் தான்.

இந்நிலையில் கடந்த மதம் மரணமடைந்த இவருக்கு நடிகர் சங்க  நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், K.பாக்யராஜ், நடிகை அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  பசுபதி,பிரேம்,  அயூப் கான் ,பிரகாஷ், குட்டி பத்மினி , சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன்,மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.