nadigarsangam put the basement

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா சென்னை,தியாகராய நகர், அபிபுல்ல சாலையிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி நடைபெறுகிறது.

இவ்விழாவில் சங்கத்தின் அணைத்து உறுப்பினர்களும் விருந்தினராக வருகை தந்து வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு நடிகர் சங்க தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இவ்விழாவில் பிரபல திரை நட்சத்திரங்கள்,மூத்த நடிகர் நடிகைகள், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாவட்ட நாடக நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.