Asianet News TamilAsianet News Tamil

காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் - பொன்வண்ணன்...

nadigar sangam support public problem
nadigar sangam support public problem
Author
First Published Apr 1, 2018, 12:17 PM IST


இன்று மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது..

இதில்  நடிகர் சங்க தலைவர் நாசர் பொருளாளர்  கார்த்தி துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் , A.L உதயா,விக்னேஷ், பிரேம்,M.A.பிரகாஷ், குட்டிபத்மினி நியமன  செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ..

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது :-

இப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை , டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாக தான் இருக்கும் ஆனால் நமது சினிமா மட்டும் மாறாக பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிறைவடைந்துவிடும் ஆனால் மாறாக இந்த முறை வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக திரையுலகமே உள்ளது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த இறுக்கமான சூழ்நிலை இளகவைக்க நாங்கள் சில நாட்களாக இரவும் பகலும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதை நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொண்வண்ணன் கூறுவார் என்றார் .

இதை தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசியது :- 

நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டு குடும்பமாக தான் வேலை செய்து வந்தார்கள். தயாரிப்பு என்பது ஒரு தயாரிப்பாளர் மட்டுமே செய்யும் வேலை அல்ல அதை தமிழகத்தில் உள்ள அனைத்து   விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இனைந்து செய்யும் வேலை. அனைவரும் ஒவ்வொரு படத்தையும் தங்களுடைய படமாக நினைத்து தான் வேலை செய்து வந்தார்கள். இதையெல்லாம் நான் பத்து வருடங்களாக கண்ணால் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டாக இனைந்து செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த தொழில் நம்பிக்கையின்மையால் மாறியுள்ளது.

 திரையரங்குகளில் ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக வேண்டும். ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக இருக்கும் போது நடிகர்களின் படங்கள் தோல்வி அடையும் போது அவர்களின் சம்பளத்தை குறைக்கும்படியும் , படம் வெற்றி பெறும் போது அவர்கள் அடுத்த படத்திலிருந்து அதற்கு ஏற்றவாறு சம்பளத்தை ஏற்றுவதற்கும் உதவியாக இருக்கும். எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சார்ஜெஸ் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது கம்மியாகியுள்ளது, அதனால் அதை குறைக்க வேண்டும். சினிமா என்பது மக்களுக்காக தான். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம்.மேலும் காவரி மேலாண்மை ஸ்ட்ர்லெட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும் என்றார் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன். 

Follow Us:
Download App:
  • android
  • ios