தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், கடந்த முறை வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,  2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது.

ராஜா அண்ணாமலைபுறத்தில் உள்ள, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில்,  பாண்டவர் அணியை சேர்ந்த அணியினர் மீண்டும் போட்டியிட்டனர்.  

தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோரும் போட்டியிட்டனர். 

அதேபோல் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், குட்டிபத்மினி, கோவை சரளா ,  பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு,  காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன்,  காந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களை எதிர்த்து, இயக்குனர் பாக்யராஜ் தலைமையில், சுவாமி சங்கரதாஸ் அணியினர் களம் கண்டனர். நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்பதால் இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் மிகவும் மும்முரமாக தேர்தல் வேலைகளில் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், 61 வாக்காளர்களை தேர்தல் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் தேர்தலில் குளறுபடிகள் உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின், புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடந்து முடித்தாலும், பல நடிகர்கள் தபால் ஓட்டுகள் போட முடியவில்லை என குற்றம் சாற்றி இருந்தனர். இதனால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என, ஒருதரப்பினரும், மற்றொரு தரப்பினர் ஒட்டு எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என கூறி, மேல் முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம். ஜூன் 23 , ஆம் தேதி நடந்த தேர்தல் செல்லாது எனவும், மறுதேத்தல் நடத்தப்படும் என நீதி மன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.