நடிகர் சங்க தேர்தல் நடந்த போது, தற்போது நடிகர் சங்க பொது செயலாளராக உள்ள, விஷால் நடிகர் சங்கத்தில் தவறுகள் நிறைய நடக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பின் ஒரு கூட்டணியாக பணியாற்றி பல்வேறு சர்ச்சைக்கு பின் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அடுத்தபடியாக நடிகர் சங்கத்துக்கு என்று ஒரு கட்டிடம் கட்டப்படும் என உறுதியளித்து தற்போது அதற்கான பணிகளில் நடிகர் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கட்டிடம் ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்ரமிப்பு செய்ததாக நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது, இதனால் தற்போது என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வருகின்றனர் நடிகர் சங்க நிர்வாகிகள்.