Asianet News TamilAsianet News Tamil

நடிகர் சங்கத் தேர்தல் தேதி....இம்முறை விஷால் போட்டியிட மாட்டார்?...

‘நடிகர் சங்கத் தேர்தல் மிக விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரால் அறிவிக்கப்படும். அதில் விஷால் மீண்டும் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது’என்று தெரிவித்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.
 

nadigar sangam election to be announced soon
Author
Chennai, First Published Apr 28, 2019, 4:10 PM IST

‘நடிகர் சங்கத் தேர்தல் மிக விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரால் அறிவிக்கப்படும். அதில் விஷால் மீண்டும் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது’என்று தெரிவித்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்.nadigar sangam election to be announced soon

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை அரசு கைப்பற்றியதால் பயங்கர அப் செட்டில் இருந்த விஷாலும், அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும் புதுப் படத்தில் பிசியாக இருப்பதால் கார்த்தியும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கூறும்போது, ’நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் . இது மாதாமாதம் நடக்கும் செயற்குழுதான். அவசரக் கூட்டமில்லை. நாங்கள் பதவிக்கு வந்த போது அறிவித்தவற்றை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி விட்டோம். கட்டிடமும் முடியும் தருவாயில் இருக்கிறது.நாங்கள் பொறுப்புக்கு வரும்போது குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்றுதான் முதல் நாளில் இருந்தே வேலையை தொடங்கினோம். சட்டப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கால தாமதத்தால் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.nadigar sangam election to be announced soon

அதற்கான வேலைகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்பார்வையில் அது தொடர்ந்து நடக்கும். நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேலைகள் நாளை முதல் தொடங்குகிறது. தேர்தலில் நாங்கள் கண்டிப்பாகப் போட்டியிடுவோம். விஷால் போட்டியிடுவாரா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது’என்றனர். ஆனால் தயாரிப்பாளர் சங்க சமாச்சாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளில் விஷால் பெயர் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நாறியதால் அவர் இம்முறை போட்டியிடுவதை நாசர், பொன்வண்ணன் வகையறா விரும்பவில்லை என்று தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios