‘சைக்கோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தின் பூஜையும் சாமீபத்தில் போடப்பட்டது. இதை தொடர்ந்து, தை பூசத்தை முன்னிட்டு திரைப்படத்தின் ஷூட்டிங்கை துவங்கியுள்ளார் இயக்குனர் மிஷ்கின். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தை தயாரிப்பாளர் T.முருகானந்தம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரிக்கிறார்.

'அவள்' , 'அரண்மனை' ஆகிய இரண்டு திகில் படங்களை தொடர்ந்த ‘பிசாசு 2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார். இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் திண்டுகல்லில் நடந்து முடிந்த நிலையில் அங்கு படப்பிடிப்பு பணிகள் கலை காட்டியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். எப்போதும் மிஷ்கினின் வித்தியாசமான படைப்புகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.