’சூப்பர் டீலக்ஸ்’ பட கேரக்டர் மாதிரி விநோதமான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து மிஷ்கின் நம்மைத் துன்புறுத்துவாரோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவர் எனில் இதோ ஒரு நற்செய்தி விஷாலை வைத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை மிக விரைவில் இயக்கப்போகிறார் அவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2017-ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த 'துப்பறிவாளன்’ படம் வெளியானது. க்ரைம் திரில்லராக உருவான இந்தப் படத்தில் வினய், பிரசன்னா, ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், சிம்ரன், கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்தப் படத்தை விஷால் தயாரித்திருந்தார். படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார். படம் வெளியாகி விமர்சனயாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது.

அந்த சுமாரான வரவேற்பே பெரிய விஷயம் என்று கருதியதாலோ என்னவோ தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் துருக்கியில் படப்பிடிப்பில் இருக்கும் விஷாலை நேரில் சந்தித்த மிஷ்கின் படத்தின் கதையைக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ’துப்பறிவாளன் 2’ விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ல் நடித்த வகையில் தொடர்ந்து முழுநேர நடிகராக மாறி வதைக்க ஆரம்பித்து விடுவாரோ என்று ஜனங்கள் பயந்துகொண்டிருந்த நிலையில் மிஷ்கினின் படம் இயக்கும் இந்த முடிவு பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.