பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் ஏப்ரல்30 ம்தேதி காலமானார்.என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் ஏப்ரல்30 ம்தேதி காலமானார்.என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார்.

முன்னணி இந்தி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூர், பிரபல நடிகையான கரீனா கபூரின் உறவினர்.கடந்த 2 ஆண்டுகளாக ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.2018ல் அவருக்கு புற்றுநோயால் கண்டறியப்பட்ட நிலையில், பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்தவர் 2019-இல் இந்தியா திரும்பினார்.

ரிஷி கபூர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த பிப்ரவரியில் அவர் இரண்டுமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான 'பாபி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

 அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில், இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூகவலைத்தளங்களில் தங்களின் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

ரிஷி கபூர் மரணம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது'' என்று கூறியுள்ளார்.