Vijay Antony daughter:பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை; இதுதான் காரணமா?

 நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

music director vijay antony daughter suicide

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. சக்சஸ்புல் இசையமைப்பாளராக வலம் வந்த இவர். கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க;- ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சி குளறுபடியில் விஜய் ஆண்டனிக்கு தொடர்பு? வாய்விட்டு ஆப்பு வைத்து கொண்ட யூடியூப் சேனல்

music director vijay antony daughter suicide

இதன்பின்னர் சலீம், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், யமன், காளி, திமிரு புடிச்சவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பிச்சைக்காரன் தான். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் லாரா என்ற மீனா சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

music director vijay antony daughter suicide

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் மின் விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;-  கேன்சர் நோயாளிகளுக்காக விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு! இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் இதுவா?

music director vijay antony daughter suicide

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அடுத்தப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே சாரா, மன அழுத்தத்தில் இருந்து வந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios