இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்தது தான். இவர் பாடிக்கொடுத்த பாடலுக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான்.

இளையராஜாவின் குடும்பமே இசைக்குடும்பம் தான். அவருடைய மூத்த மகன் கார்த்திக் ராஜா மற்றும் அவருடைய  இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இசையமைப்பாளர்களாக உள்ளனர். மகள் பவதாரிணி பின்னணி பாடகியாக உள்ளார்.  

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில்  பவதாரிணி ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த பாடலை பாடிய பவதாரிணி குறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் 'நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் ரசித்து கேட்டுள்ளேன். இன்று உங்களுடன் இணைந்து ஒரு பாடலில் பணிபுரிந்துள்ளதில் பெரும் மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் இனிமையான குரலுக்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார்.