கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடகி லதா மங்கேஷ்கர் உய்ரிழந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் பப்பி லஹரி (Bappi lahiri) மரணமடைந்துள்ளது இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஆண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பப்பி லஹரி (Bappi lahiri). கொரோனாவில் இருந்து மீண்டாலும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு காரணமாக பப்பி லஹிரி (Bappi lahiri) கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், அவரை மறுபடியும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்லமாக பாப்பி டா என்று அழைக்கப்படும் இவர், பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, ஷராபி, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழிலும் இவர் பாடும் வானம் பாடி என்கிற படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடகி லதா மங்கேஷ்கர் (lata mangeshkar) உய்ரிழந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் பப்பி லஹரி மரணமடைந்துள்ளது இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
