புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். அவருடைய கதை, திரைக்கதை பாணியை யாராலும் அவ்வளவு எளிதியில் கையாள முடியாது. அவரைப் போலவே அவரது மகன் சாந்தனுவும், சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க முயன்று வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கசட தபற திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’. புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி உள்ளது. இந்நிலையில், முருங்கைகாய் சிப்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் மட்டி, ஜெயில் போன்ற படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.