நடிகர் விஜயை வைத்து இயக்கி 'கத்தி', 'துப்பாக்கி' போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக விஜய்டி வைத்து இயக்க போவதாக கூறப்படுகிறது.

 தற்போது இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தன்னுடைய ' 62வது' படத்தில் தான் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். 

இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , மகேஷ்பாபு 23 படத்திற்கு அளித்த பேட்டியில் அடுத்ததாக , விஜய் படத்தை இயக்கவிருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகைசோனாக்ஷி சின்ஹா நடிப்பார் என கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளிவந்த 'அகிரா', 'ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி'-துப்பாக்கி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாயகி சோனாக்ஷி சின்ஹா முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

சோனாக்ஷி சின்ஹா ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.