பிக்பாஸ் சீசன் 2 -ல் நேற்றைய தினம் முதல் முறையாக, நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 16 போட்டியாளர்களை சந்தித்து பேசினார். இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.  

தொகுப்பாளர் கமல், அனைத்து போட்டியாளர்களுடன் பேசினார். அப்போது தமிழ் சினிமாவில், 90 களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மும்தாஜுடனும் பேசினார். 

அப்போது போட்டியாளர்களின் ஒருவர், மும்தாஜ் தற்போதும் மூன்று வயது குழந்தை போல் தான் மனதளவில் உள்ளதாக கூறினார். உடனே மும்தாஜ் தனக்கு 37 வயது ஆகிறது என கூறினார். 

இதற்கு நடிகர் கமல்ஹாசன் நீங்கள் தைரியமாக வயதை வெளியில் சொல்லி விட்டீர்கள். ஆனால் நான் தற்போது என்னுடைய வயதை சொல்லுவதே இல்லை. அனைவருக்கும் என்னுடைய வயது தெரிந்து விட்டது என காமெடியாக கூறி சிரித்தார்.

 

உடனே மும்தாஜ் எவ்வளவு நாள், சார் வயதை மறைக்க முடியும் என்னுடைய வயது 37 வயது என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். இதன் மூலம் தற்போது நடிகை மும்தாஜ் உண்மையான வயது வெளியாகியுள்ளது.