பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. எப்படியும் இந்த வாரம் ஐஸ்வர்யா வெளியே போக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல் வயல் கார்டு சுற்றில் இனி புதிதாக எந்த பிரபலமும் வர வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இறுதி நாட்கள் நெருங்க நெருங்க பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, டாஸ்க்குகளும் மிகவும் கடுமையாகிக்கொண்டே போகிறது. கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களை நேரடி எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் சொல்லுவதை செய்ய வேண்டும்.

அதன்படி, ஜனனிக்காக பாலாஜி மொட்டை அடித்துக்கொண்டார், ரித்விகா விஜயலஷ்மிக்காக  கையில் டாட்டோ செய்து கொண்டார், அதே போல் சென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தன்னுடைய முடியை கட் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ரித்விக்காவை நேரடி ஏவிக்ஷனில் இருந்து காப்பாற்ற மும்தாஜ் அவருடைய தலை முடியை எலெக்ட்ரிக் கிரீன் கலரில் ஹேர் கலர் செய்து கொள்ள வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறது. இதனை ரித்விகா மும்தாஜிடம் கூறிய போது, என்னுடைய முடியை என்னால் எதுவும் செய்து கொள்ள முடியாது என்று நேரடியாக மூஞ்சில் அடித்து போல் கூறுகிறார்.

இதற்கு ரித்விகா நீங்கள் அந்த கிரீன் கலரை நிறைய நாட்கள் வைத்திருக்க வேண்டாம் என கூறியதும், ரித்து ஹேர் கலர் செய்து கொள்ள ப்ளன்டர் போட வேண்டும் அது தன்னால் முடியாது, தன்னுடைய முடியை ப்ளீச் செய்து கொள்ள தான் தயாராக இல்லை என்றும் கூறுகிறார். 

இதற்கு ரித்விக்கா, தனக்காக இதை நீங்கள் செய்வீர்கள் என நம்புவதாக கூறுகிறார். உடனே இந்த செயலை தன்னுடைய அம்மாவிற்காக கூட செய்ய மாட்டேன் என கூறுகிறார். இந்த டாஸ்க்கை ரித்விக்காவிற்க்காக மும்தாஜ் செய்யாததால், அடுத்த வாரம் ரித்விகா நேரடியாக எவிக்ஷனுக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.