பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதார்த்தமான மனிதராக அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட போட்டியாளர் காமெடி நடிகர் சென்றாயன். சிட்டியில் பிறந்து வளர்த்த, நடிகர்கள் மத்தியில் தற்போது அவர் இருந்தாலும் பழமை மறவாமல் தன்னுடைய கிராமத்து பழக்க வழக்கங்களை கைவிடாமல் பாலோ செய்து வருகிறார். இதனை குரல் எக்ஸ்பேர்ட் ஆனந்த் வைத்தியநாதன் வெளியில் வரும்போது கூட கமலஹாசனிடம் தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம்,பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயனின் மனைவி அவரை காண பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தார். சென்றாயன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு சென்றாயன அதிகம் மிஸ் செய்தது அவர் மனைவியை தான் என அவரே பலமுரை கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் வைத்து சென்றாயனை பார்த்த அவரது மனைவி அவருக்கு தான் கர்பமாக இருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த சென்றாயனிடம் ”நீ அப்பாவாகிட்ட” என அவரின் மனைவி கூறிய அடுத்த நொடி மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்றாயன் துள்ளுகிறார். அழுகை , மகிழ்ச்சி என கலவையான உணர்ச்சியில் அவர் “ நான் அப்பாவாகிட்டேண்டா” என கத்தி கூச்சலிடுவது பார்ப்பவர்களை நெகிழச்செய்கிறது.  

யதார்த்தம் என்ற பெயரி உணர்வுகளை வெளிகாட்டி கொள்ளாமல் கட்டுப்படுத்தி கொள்ளும் நாகரீகங்கள் தெரியாததாலோ என்னவோ, சென்றாயனின் இந்த மகிழ்ச்சி பார்ப்போரை நெகிழச்செய்கிறது. திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த குழந்தையை நினைத்து அந்த தம்பதியர் அடைந்திருக்கும் பூரிப்பு நெகிழ்ச்சியுற செய்கிறது. 

மேலும் இந்த மகிழ்ச்சியை அவர் மட்டும் இன்றி, அவரது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்கள் இருவருக்கும் சந்தானம் பூசி குங்குமம் வைத்து கிட்ட தட்ட வளைகாப்பு விசேஷம் போல் நேற்றைய தினம் பிக்பாஸ் வீடு கலைகட்டியது.

அனைத்து போட்டியாளர்களும், இவர்களை கட்டி அனைத்தும், கை குலுக்கியும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில். மும்தாஜ் திடீர் என தன்னுடைய விலை உயர்ந்த தங்க வளையலை அறிவித்தார். சற்றும் யோசிக்காமல் இவர் செய்த காரியம் ரசிகர்கள் மனதை மனதை கவர்ந்து விட்டது. இதனால் மும்தாஜின் நல்ல மனது வெளிப்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.